ஐபிஓ முதலீடு

ஐபிஓவில் ஒதுக்கீடுகள்

நிலையான விலை வெளியீடுகள்

நிலையான விலை ஐபிஓ/எஃப்பிஓக்களில் இரண்டு விதங்கள் உள்ளன: ரூ. 2,00,000 அல்லது அதற்கும் அதிகமான தொகைக்கு விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் ரூ.2,00,000 வரையிலான தொகைக்கு விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்கள்.

பதிவு உருவாக்க வெளியீடுகள்
பதிவு உருவாக்க வெளியீட்டில், சில்லறை தனி முதலீட்டாளர்கள் (ஆர்ஐஐகள்), நிறுவனம்சாரா முதலீட்டாளர்கள் (என்ஐஐகள்) மற்றும் தகுதிபெற்ற நிறுவனம்சார் வாங்குவோருக்கான (க்யூஐபிகள்) ஒதுக்கீடு முறையே 35:15: 50 என்ற விகிதத்தில் இருக்கும்.

சில்லறை தனி முதலீட்டாளர்களுக்கான விளக்கம் (ஆர்ஐஐகள்)
‘சில்லறை தனி முதலீட்டாளர்’ என்பது, ரூ. 2, 00,000 அல்லது அதற்கும் அதிகமாக அல்லாத தொகைக்கு கோரிக்கை அளிக்கும் முலீட்டாளரைக் குறிக்கிறது.

நிறுவனம்சாரா முதலீட்டாளர்கள் (என்ஐஐகள்)
க்யூஐபிக்கள் அல்லது ரூ. 2, 00,000க்கும் குறைவான தொகைக்கு விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்கள் அனைவரும் என்ஐஐ-க்களாகக் கருதப்படுவர். உண்மையில், இவ்வகையானது உயர் நிகர மதிப்புள்ள நபர்கள் (ஹெச்என்ஐ-க்கள்) மற்றும் தொழில்துறை அமைப்புகளைக் கொண்டதாகும்.

தகுதிபெற்ற நிறுவனம்சார் வாங்குவோருக்கான விளக்கம் (க்யூஐபி-க்கள்)
க்யூஐபிக்கள் என்பவர்கள் முதலீட்டு சந்தைகளை மதிப்பீடு செய்து அவற்றில் முதலீடு செய்யக்கூடிய திறனும் நிதிசார் வல்லமையும் கொண்ட நிறுவனம்சார் முதலீட்டாளர்கள் ஆவார்கள். க்யூஐபி–யை செபி

ஏ) நிறுவனங்கள் சட்டம், 1956-ன் 4அ-பிரிவில் அறுதியிடப்பட்டுள்ள பொது நிதி நிறுவனம் என்று விளக்குகிறது; இவை
பி) பட்டியலிடப்பட்டுள்ள வர்த்தக வங்கிகள்;
சி) பரஸ்பர நிதிகள்;
டி) செபியில் பதிவுசெய்யப்பட்டுள்ள அயல்நாட்டு நிறுவனம்சார் முதலீட்டாளர் மற்றும் துணை கணக்கு (அயல்நாட்டு தொழில் நிறுவனம் அல்லது அயல்நாட்டு நபருடையது அல்லாத ஒரு துணைக் கணக்கு);
இ)

பலதரப்பு மற்றும் இருதரப்பு மேம்பாட்டு நிதி நிறுவனங்கள்;

எஃப்) செபியில் பதிவுசெய்யப்பட்டுள்ள தொழில்முயற்சி முதலீட்டு நிதியங்கள்.
ஜி) செபியில் பதிவுசெய்யப்பட்டுள்ள அயல்நாட்டு தொழில்முயற்சி முதலீட்டு நிதியங்கள்.
எச்) மாநில தொழில் மேம்பாட்டுக் கழகங்கள்.
ஐ) காப்பீட்டு கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் (ஐஆர்டிஏ) பதிவுசெய்துள்ள காப்பீட்டு நிறுவனங்கள்.
ஜே) ரூ.25 கோடி இருப்புத்தொகை உள்ள வருங்கால வைப்பு நிதிகள்
கே) ரூ.25 கோடி இருப்புத்தொகை உள்ள ஓய்வூதிய நிதிகள்
எல்) இந்திய கெஜட்டில் வெளியிடப்பட்ட, இந்திய அரசின் நவம்பர் 23, 2005 தேதியிட்ட தீர்மானம் கோப்பு எண் 2/3/2005-DDIIன்படி அமைக்கப்பட்ட தேசிய முதலீட்டு நிதியம்
எம்) இந்திய மத்திய அரசின் இராணவம், கடற்படை அல்லது விமானப்படையினால் நிறுவப்பட்ட, நிர்வகிக்கப்படும் காப்பீட்டு நிதியங்கள்
என்) அஞ்சலக ஆயுள் காப்பீட்டு நிதியம் (பிஎல்ஐஎஃப்) மற்றும் கிராமிய ஆயுள் காப்பீட்டு நிதியம் (ஆர்பிஎல்ஐஎஃப்) போன்ற, இந்திய அஞ்சலகத் துறையினால் அமைக்கப்பட்ட காப்பீட்டு நிதியங்கள்.

க்யூஐபிக்களைப்போல் இந்த அமைப்புகள் செபியுடன் பதிவுசெய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இவ்வகையைச் சேர்ந்த மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்த அமைப்புகளும், முதன்மை வெளியீட்டு செயல்முறையில் பங்கேற்கும் நோக்கத்திற்காக க்யூஐபிக்களாகக் கருதப்படுகின்றன.

அனைத்துவகை முதலீட்டாளர்களும், பொது வெளியீட்டு பிணையங்களுக்கான விண்ணப்பத்துடன் இறுதியீடாக 100% விண்ணப்பத்தொகையைக் கொண்டுவர வேண்டியது அவசியமாகும். இது பொது வெளியீடுகளில் தேவை மிகைப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காகவும், பிணைப் பத்திரங்களுக்காக பதிவுசெய்யும் முதலீட்டாளர்களுக்கு சமமான களத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் செய்யப்படுகிறது.
 

முக்கியமான
தொடுப்புகள்